For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்பாத்தியத்தில்... ஷரபோவாவை பின்னுக்குத் தள்ளி டாப்புக்கு வந்த செரீனா!

லாஸ் ஏஞ்செலஸ்: அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் வரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை இந்த இடத்தில் அசைக்க முடியாத அளவுக்கு உட்கார்ந்திருந்த மரியா ஷரபோவாவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் கர்பின் முகுருசாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த செரீனா இப்போது ஷரபோவாவை சம்பாத்தியத்தில் வீழ்த்தியுள்ளார்.

Serena tops Sharapova as world's highest paid sportswoman

போர்ப்ஸ் பத்திரிகை செய்தியின்படி அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனைகள் வரிசையில் ஷரபோவாவை செரீனா முந்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • செரீனா வில்லியம்ஸ் கடந்த 12 மாதங்களில் 28.9 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
  • கடந்த 11 வருடமாக அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனையாக ஷரபோவா இருந்து வந்தார்.
  • 34 வயதாகும் செரீனா கடந்த 10 வருடமாக டென்னிஸ் அரங்கை கலக்கி வரும் வீராங்கனை ஆவார்.
  • இதுவரை 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளார்.
  • முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
  • செரீனா வில்லியம்ஸ் இதுவரை தனது டென்னிஸ் வாழ்க்கையில் 77.6 மில்லியன் டாலருக்கும் மேல் சம்பாதித்துள்ளார்.
  • விளம்பர வருவாயில் ஷரோபவா, அனைவரையும் விட முன்னணியில் உள்ளார். பல முன்னணி நிறுவனங்களுக்கு அவர் மாடலாக இருக்கிறார்.
  • ஷரபோவா கடந்த 12 மாதங்களில் 21.9 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் டாலர் குறைவாகும்.
  • இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் அமெரிக்க தற்காப்புக் கலைஞர் ரான்டா ரோசி உள்ளார்.
  • அடுத்த இடத்தில் கார் ரேஸ் வீராங்கனை டேனிகா பேட்ரிக் இருக்கிறார்.
Story first published: Tuesday, June 7, 2016, 11:30 [IST]
Other articles published on Jun 7, 2016
English summary
Two days after her stunning loss to Garbine Muguruza in the French Open final, Serena Williams scored a different win on Monday, when Forbes Magazine reported she has overtaken Maria Sharapova as the world's highest-paid sportswoman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X