அமெரிக்க ஓபன் இறுதியில் அதிர்ச்சி வெற்றி.. 21 வருட அனுபவ செரீனாவை வீழ்த்திய டீனேஜ் பெண்!

நியூயார்க் : 2019 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ்-ஐ வீழ்த்தினார் 19 வயது பியான்கா ஆண்ட்ரீஸ்கு.

செரீனா வில்லியம்ஸ் இந்த முறை அமெரிக்க ஓபன் தொடரை வென்றால் அது மார்கரெட் கோர்ட்-டின் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்வார் என்ற நிலை இருந்தது.

முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி

முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி

ஆனால், அதை தடுத்து நிறுத்திய பியான்கா, தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதுவும் அனுபவ செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி வென்றுள்ளார். செரீனா நடப்பு அமெரிக்க ஓபன் தொடரில் நல்ல பார்மில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயது புயல்

19 வயது புயல்

யார் இந்த பியான்கா ஆண்ட்ரீஸ்கு? கனடாவை சேர்ந்த 19 வயது இளம் டென்னிஸ் வீராங்கனை தான் பியான்கா. தற்போது மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 15ஆம் இடத்தில் இருக்கிறார் ஆண்ட்ரீஸ்கு. இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிராத அவர், அனுபவ செரீனாவை வீழ்த்தி தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

எப்படி வென்றார்?

எப்படி வென்றார்?

மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் முதல் செட்டை மிக எளிதாக 6 -3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார் ஆண்ட்ரீஸ்கு. இரண்டாம் செட்டில் தான் செரீனா சிறிது சுதாரித்து ஆடினார்.

இரண்டாவது செட்

இரண்டாவது செட்

இரண்டாவது செட்டில் முதலில் 5 - 1 என்ற அளவில் முன்னிலையில் இருந்தார் பியான்கா. இன்னும் ஒரு கேம் வென்றால் 6 - 1 என்ற கணக்கில் பியான்கா வெற்றி பெறுவார், இறுதிப் போட்டியையும் வெல்வார் என்ற நிலையில் செரீனா தன் போராட்டத்தை துவக்கினார். எனினும், பியான்கா 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வென்றார்.

செரீனா தொடர் தோல்வி

செரீனா தொடர் தோல்வி

இதைத் தொடர்ந்து 6 - 3, 7 - 5 என்ற செட் கணக்கில் பியான்கா ஆண்ட்ரீஸ்கு, செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார். செரீனா கடந்த ஆண்டும் அமெரிக்க ஓபன் இறுதி வரை வந்து தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமெரிக்க ஓபன் இறுதியில் தோல்வி அடைந்து இருக்கிறார் செரீனா.

முக்கிய சாதனைகள்

முக்கிய சாதனைகள்

செரீனா இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் மூன்று முக்கிய சாதனைகளை செய்து இருப்பார். 1௦1 அமெரிக்க ஓபன் வெற்றிகள் மற்றும் ஆறு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் கிறிஸ் ஈவர்ட் உடன் செரீனா சமநிலையில் இருக்கிறார்.

தள்ளிப் போகும் சாதனை

தள்ளிப் போகும் சாதனை

இறுதிப் போட்டியில் அவர் வெற்றி பெற்று இருந்தால், கிறிஸ் ஈவர்ட்டை அவர் முந்தி புதிய சாதனை நிகழ்த்தி இருப்பார். அதே போல 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மார்கரெட் கோர்ட் உடன் சமன் செய்து இருப்பார். அந்த சாதனைகள் மீண்டும் தள்ளிப் போய் இருக்கிறது.

அனுபவம்

அனுபவம்

செரீனா வில்லியம்ஸ் 1998முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 1999இல் தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். சுமார் 21 ஆண்டு அனுபவம் கொண்டவர் செரீனா.

பியான்கா வயது

பியான்கா வயது

ஆனால், பியான்கா பிறந்ததே 2000ஆம் ஆண்டில் தான். அவருக்கு 19 வயது தான் ஆகிறது. செரீனாவின் அனுபவத்தை விட குறைந்த வயது கொண்ட பியான்கா, அவரை வீழ்த்தி உள்ளார் என்பது வியப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தோற்றார்

கடந்த ஆண்டு தோற்றார்

கடந்த 2018 அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியிலும் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து இருந்தார். அந்தப் போட்டியில் நடுவருடன் செரீனா வாக்குவாதம் செய்து, போட்டியை சண்டைக் களமாக மாற்றினார். எனினும், இந்த முறை அமைதியாகவே நடந்து கொண்டார் செரீனா. தோல்வி அடைவது போன்ற சூழ்நிலைகளிலும், போட்டியில் பதற்றம் அடையவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Serena Williams with 21 years of experience lost to 19 year old Bianca Andreescu in US open 2019 finals.
Story first published: Sunday, September 8, 2019, 10:37 [IST]
Other articles published on Sep 8, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X