For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மக அச்சுன்னு தும்மினாகூட எனக்கு பக்குன்னு பயம்மா இருக்கு... கொரோனா பீதியில் செரீனா!

புளோரிடா : கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக தனிமைப்படுத்துலை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது தனிமையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த தனிமைப்படுத்துதல் தனக்கு விளிம்பு நிலையில் உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

மேலும் டன் கணக்கில் தனக்கு மன நெருக்கடியை கொரோனா கொடுத்துள்ளதாகவும் தன்னுடைய 2 வயது குழந்தை ஒலிம்பியா குறித்த அச்சத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சாம்பியன் செரீனா வில்லியம்ஸ்

உலக சாம்பியன் செரீனா வில்லியம்ஸ்

சர்சதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள சமூக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகிறார்.

விளிம்பில் இருப்பதுபோல உள்ளது

விளிம்பில் இருப்பதுபோல உள்ளது

இந்நிலையில் இந்த சமூக தனிமைப்படுத்துதல் தனக்கு மிகுந்த மனநெருக்கடியை அளித்துள்ளதாக செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார். விளம்பில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்தியன் வெல்ஸ் தொடர் ரத்தான போது, தான் தன்னுடைய ஓய்வை தன்னுடைய குழந்தையுடன் சிறப்பாக கழிக்க விரும்புவதாக கூறியிருந்தார் செரீனா.

செரீனா வில்லியம்ஸ் அச்சம்

செரீனா வில்லியம்ஸ் அச்சம்

இந்நிலையில், நிபுணர்களின் பரிந்துரைப்படி தான் சமூக தனிமைப்படுத்துதலை தன்னுடைய வீட்டில் மேற்கொண்டுள்ளதாகவும், ஆனால் அது தனக்கு டன் கணக்கில் ஸ்ட்ரெசை அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோக்களில் தன்னுடைய 2 வயது குழந்தை ஒலிம்பியாவின் ஆரோக்கியம் குறித்த அச்சத்தை தள்ளி வைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

குழந்தை குறித்த அச்சம்

குழந்தை குறித்த அச்சம்

தன்னை சுற்றி நடக்கும் சிறிய சிறிய விஷயங்களும் தனக்கு அச்சத்தை அளிப்பதாகவும், தன்னுடைய குழந்தை சிறிதாக இருமினாலும் தான் கோபம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவள் ஆரோக்கியமாக இருக்கிறாளா? ஏதாவது பிரச்சினை இருக்குமோ, தான் ஏதாவது செய்ய வேண்டுமா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுவதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, March 22, 2020, 13:38 [IST]
Other articles published on Mar 22, 2020
English summary
Social Distancing Has Serena Williams "On Edge" Amid Coronavirus Pandemic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X