For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஓபன் தொடருக்கு தயாராகும் செரீனா வில்லியம்ஸ்

நியூயார்க் : இந்த ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் கழகம் கடந்த வாரத்தில் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரை நடத்த எதிர்ப்பும் ஆதரவும் சேர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது வீட்டில் புதிதாக டென்னிஸ் கோர்ட் போடப்பட்டுள்ளது.

இந்தியாவோட சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கேன்... ஸ்டீவ் ஸ்மித்இந்தியாவோட சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கேன்... ஸ்டீவ் ஸ்மித்

அமெரிக்க டென்னிஸ் கழகம் அறிவிப்பு

அமெரிக்க டென்னிஸ் கழகம் அறிவிப்பு

கொரேனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேள்விக்குறியாக இருந்த அமெரிக்க ஓபன் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை நடத்தப்படும் என்று அமெரிக்க டென்னிஸ் கழகம் கடந்த வாரத்தில் அறிவித்துள்ளது.

செரீனா வில்லியம்ஸ் வரவேற்பு

செரீனா வில்லியம்ஸ் வரவேற்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது. முன்னணி வீரர்கள் நோவக் ஜோகோவிக் மற்றும் ரபேல் நடால் போன்றவர்கள் இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தாத நிலையில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளார்.

24வது கோப்பைக்காக காத்திருப்பு

24வது கோப்பைக்காக காத்திருப்பு

செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளை இதுவரை பெற்றுள்ளார். 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதன்மூலம் முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் முந்தைய சாதனையை வெல்லவும் காத்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து வெற்றியை கைநழுவவிட்ட செரீனா, தற்போது இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை வெல்ல தீவிரமாக உள்ளார்.

செரீனா பயிற்சி

செரீனா பயிற்சி

கடந்த இரண்டு மாதங்களாக இதற்கென தனது வீட்டிலேயே தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர் தற்போது, தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கோர்ட்டில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். கடந்த 1978லிருந்து முதல் முறையாக அமெரிக்க ஓபன் போட்டிகள் இந்த முறை புதிய அரங்கத்தில் நடைபெறவுள்ளன. இதற்கென செரீனா இல்லத்தில் பயிற்சி மேற்கொள்ளும்வகையில் புதிய கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, June 21, 2020, 17:25 [IST]
Other articles published on Jun 21, 2020
English summary
Serena Williams Installs new surface at Home
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X