ஆக்லாந்து கிளாசிக் கோப்பை வெற்றி - ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு செரினா நன்கொடை

டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் தொடரின் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெசிகா பெகுலாவை 6க்கு 3 மற்றும் 6க்கு 4 என்ற செட்கணக்கில் செரினா வில்லியம்ஸ் வெற்றி கண்டுள்ளார்.

இந்த வெற்றிக்கான பரிசுத் தொகையான இந்திய மதிப்பில் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செரினா நன்கொடையாக வழங்கினார்.

கடந்த 3 ஆண்டுகளாக கோப்பைகள் இன்றி இருந்த அவர் இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றி தேவதையை தன்வசமாக்கியுள்ளார்.

செரினா வில்லியம்ஸ் வெற்றி

செரினா வில்லியம்ஸ் வெற்றி

டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் தொடரின் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெசிகா பெகுல்லாவை அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் வெற்றிக் கொண்டுள்ளார்.

ஜெசிகா பெகுல்லாவுடன் மோதல்

ஜெசிகா பெகுல்லாவுடன் மோதல்

இன்று நடைபெற்ற டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெசிகா பெகுல்லாவை 6க்கு 3 மற்றும் 6க்கு 4 என்ற நேர் செட்கணக்கில் செரினா வில்லியம்ஸ் வெற்றி கொண்டார்.

நன்கொடை அளித்த செரினா

நன்கொடை அளித்த செரினா

இந்த வெற்றியின்மூலம் தான் பெற்ற 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை செரினா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

செரினா வில்லியம்ஸ் உருக்கம்

செரினா வில்லியம்ஸ் உருக்கம்

போட்டியின் வெற்றியை அடுத்து பேசிய செரினா வில்லியம்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக தான் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருவதாகவும், தற்போது காட்டுத்தீ குறித்த செய்திகளை படிக்கும்போது, வேதனையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏலத்தில் விட முடிவு

ஏலத்தில் விட முடிவு

இந்நிலையில் ஆக்லாந்தில் முதல் ரவுண்டிற்கான போட்டியில் தான் அணிந்திருந்த உடையில் கையெழுத்திட்டு அதை ஏலத்தில் விட்டு, அந்த தொகையையும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளார்.

முடிவுக்கு வந்த 3 ஆண்டுகள்

முடிவுக்கு வந்த 3 ஆண்டுகள்

டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் தொடரின் இந்த வெற்றி மூலம் குழந்தை பேற்றின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கோப்பை எதையும் கைபற்றாத அவரது வறட்சி நிலை முடிவுக்கு வந்துள்ளது.

சுதாரித்து ஆட்டம்... வெற்றி...

சுதாரித்து ஆட்டம்... வெற்றி...

முதல் செட்டில் தன்னை எதிர்த்து ஆடிய ஜெசிகா பெகுல்லாவிடம் 1க்கு 3 என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த செரினா வில்லியம்ஸ் பின்பு சுதாரித்து ஆடி வெற்றிக் கோப்பையை அடைந்துள்ளார்.

சாதனையை சமன்செய்ய காத்திருப்பு

சாதனையை சமன்செய்ய காத்திருப்பு

இந்நிலையில் இம்மாத இறுதியில் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி 24வது கிராண்ட் ஸ்லாம் வெற்றி பெறுவதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்ய செரினா வில்லியம்ஸ் காத்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Serena Williams Donates WTA Auckland Classic Victory's Winners cheque to Australia Bushfire Victims
Story first published: Sunday, January 12, 2020, 19:03 [IST]
Other articles published on Jan 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X