For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹய்யா ... என் காலு சரியாய்ருச்சு.. ஆனாலும் விளையாட முடியாது.. ஹாலப்பின் மகிழ்ச்சி + சோகம்!

புச்சாரெஸ்ட்: ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலப் ஹேப்பியாகியுள்ளார். ஆம், அவரது கால் வலி சரியாகி விட்டதாம். காலை நன்றாக ஊன்றி நடக்க முடிகிறதாம், ஓட முடிகிறதாம்.. எல்லாம் சரியாகி விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

2 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்தான் ஹாலப். கடந்த பிப்ரவரி மாதம் இவர் துபாயில் நடந்த டபிள்யூடிஏ டோர்னமென்ட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆனால் தோஹா தொடருக்கு முன்பு அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தோஹா தொடரிலிருந்து அவர் விலகினார்.

அவருக்கு எம்ஆர்ஐ எடுத்துப் பார்க்கப்பட்டது. அப்போது அவருக்கு தசை நாண் அழற்சி அதாவது tendinitis ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

அடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்அடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்

சரியான கால் வலி

சரியான கால் வலி

கால்வலி காரணமாக அடுத்து வந்த இன்டியன் வெல்ஸ் தொடரை விட்டும் விலகினார் ஹாலெப். ஆனால் அந்தத் தொடரே பின்னால் கொரோனாவைரஸ் காரணமாக ரத்தாகி விட்டது. மேலும் அடுத்தடுத்து டென்னிஸ் தொடர்களும் ரத்தாகியதால் அது ஹாலப்புக்கு நல்ல ஓய்வாகி விட்டது. தற்போது அவரது கால் வலி சரியாகியுள்ளதாம். இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஹாலப்.

அனைவரையும் மிஸ் செய்கிறேன்

அனைவரையும் மிஸ் செய்கிறேன்

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், எனக்கு கால் வலி சரியாகி விட்டது. என்னால் இப்போது எளிதாக ஓட முடியும். காலை ஊன்ற முடியும். எனது அணியை மிஸ் செய்கிறேன். எனது வீரர்களை மிஸ் செய்கிறேன். எல்லோரையும் மிஸ் செய்கிறன். மீண்டும் ஆக்ஷனில் இறங்க ஆவலாக காத்திருக்கிறேன் என்று உருகியுள்ளார் ஹாலப்.

மீண்டும் வருவோம்

மீண்டும் வருவோம்

மேலும் அவர் கூறுகையில், இது அனைவருக்குமே சற்று கடினமான நேரம்தான். அனைவருமே வீடுகளில் தங்கியிருப்போம். முன்பை விட வலிமையாக, பாசிட்டிவாக மீண்டு வருவோம். விரைவில் அனைத்தும் சரியாகும். மீண்டும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன். டென்னிஸ் விளையாட துடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ஹாலப்.

இப்போதைக்கு வாய்ப்பில்லை

இப்போதைக்கு வாய்ப்பில்லை

ஹாலப்புக்கு இப்படி ஆசை இருந்தாலும் அது இப்போதைக்கு நடக்காது என்றே தெரிகிறது. விம்பிள்டனை ஒத்திவைத்து விட்டனர். பிரெஞ்சு ஓபனும் ஒத்திவச்சாச்சு. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரும் டவுட்டுதான். ஒலிம்பிக் போட்டியும் இந்த வருடம் கிடையாது. இப்படி எல்லாப் பக்கமும் அணை போட்டு விட்டது இந்த கொரோனா வைரஸ்.

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்

இருந்தாலும் ஹாலப் மீண்டு வந்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அவரது அதிரடி ஆக்ஷனுக்காக அனைவரும் ஆவலோடு காத்துள்ளனர். 27 வயதாகும் ஹாலப் 2018ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் 2019ல் விம்பிள்டன் பட்டத்தையும் வென்றவர். 2018ல் அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். 2015 அமெரிக்க ஓபன் தொடரில் அரை இறுதி வரை முன்னேறியவர் ஹாலெப்.

Story first published: Tuesday, April 7, 2020, 13:16 [IST]
Other articles published on Apr 7, 2020
English summary
Romanian Tennis star Simona Halep has said that she has recovered from her Foot Injury
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X