For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: 2-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் வீழ்ந்தார்

By Mathi
Table Tennis
லண்டன்: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 2-வது சுற்றில் வடகொரியாவின் கிம் ஹியோக்கிடம் வீழ்ந்தார்.

நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் கோஷ் பிரேசிலின் குஸ்டவோ சுபோயுடன் மோதினார். முதல் இரண்டு செட்கள் 11-9, 14-12 என்ற புள்ளிக் கணக்கில் கோஷ் வசமானது. 3வது செட்டில் 7-11 என்ற புள்ளிகளால் அது பிரேசில் வீரருக்கு போனது. 4வது செட்டிலும் பிரேசில் வீரர் கடுமை காட்டினாலும் கோஷ் 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார்.

5வது செட்டில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 5-11 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் பிரேசில் வீரர் வசமானது. ஆனால் கடைசி செட்டை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக ஆடி 4-2 என்ற கணக்கில் பிரேசில் வீரரை கோஷ் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று வடகொரியாவின் கிம் ஹியோக் பாங்குடன் மோதினார் செளம்யஜித் கோஷ். முதல் செட்டில் மட்டும் நன்றாக ஆடி வென்ற கோஷ், அடுத்த நான்கு செட்களிலும் தோ்ல்வியைத் தழுவினார். இப்போட்டியில், 11-9, 6-11, 5-11, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று வெளியேறினார் கோஷ்.

Story first published: Sunday, July 29, 2012, 16:58 [IST]
Other articles published on Jul 29, 2012
English summary
North Korea's Bong beat India's Ghosh in men's Table Tennis in London Olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X