For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொட்டை மாடி... மொட்டை மாடி.. வேற ஒன்னும் இல்லீங்க.. டென்னிஸ் விளையாடுறாங்க!

லிகுரியா, இத்தாலி: கொரோனாவிடம் சிக்கி மிகப் பெரிய பாதிப்பை சந்தித்த நாடு இத்தாலி. இங்கு விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இருப்பினும் லிகுரியா என்ற பகுதியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருவர் டென்னிஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப் பெரிய உயிரிழப்பை சந்தித்த நாடு இத்தாலிதான். காரணம் அந்த நாட்டில் ஆரம்பத்திலேயே சுதாரிக்காமல் அலட்சியமாக இருந்ததால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டு விட்டது.

இப்போது இத்தாலியில் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் அங்கு ஊரடங்கு தொடர்கிறது. மக்கள் தொடர்ந்து பீதியில்தான் இருந்து வருகின்றனர்.

5000 கோடி அம்பேல்.. வேகமாக பரவிய கொரோனா.. ரொம்ப லேட்டாக விழித்த பிசிசிஐ.. மாபெரும் தவறு அம்பலம்!5000 கோடி அம்பேல்.. வேகமாக பரவிய கொரோனா.. ரொம்ப லேட்டாக விழித்த பிசிசிஐ.. மாபெரும் தவறு அம்பலம்!

மொட்டை மாடியில் டென்னிஸ்

மொட்டை மாடியில் டென்னிஸ்

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த வீடியோ காட்சியை ஏடிபி டூர் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இருவர் டென்னிஸ் விளையாடுகின்றனர். அதாவது இரு வீடுகளின் மொட்டை மாடியில் இருந்தபடி இந்த டென்னிஸ் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தப் பக்கம் ஒரு பெண், அந்தப் பக்கம் ஒரு பெண். இருவரும் ஜ ஜாலியாக டென்னிஸ் ஆடுகின்றனர். இதுதான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

லிகுரியா பிரதேசம்

லிகுரியா பிரதேசம்

இந்த விளையாட்டு நடைபெறும் இடம் இத்தாலியின் லிகுரியா என்ற பிரதேசமாகும். இங்கும் கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்டோர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியானது தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில்தான் மொட்டை மாடிகளிலிருந்தபடி இந்த இரு சின்னப் பெண்களும் டென்னிஸ் ஆடியுள்ளனர். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.

விளையாட்டு ஸ்தம்பிப்பு

விளையாட்டு ஸ்தம்பிப்பு

இத்தாலி கால்பந்துக்குப் பெயர் போனது. ஏகப்பட்ட கிளப்கள் இங்கு உள்ளன. எல்லாமே தற்போது வெறிச்சோடிப் போயுள்ளன. இத்தாலியின் பொருளாதாரமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மக்கள் பெரும் விரக்தியுடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ சின்னதாக ஒரு நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளது. விரைவில் மீண்டு வருவோம் என்ற செய்தியை இந்த வீடியோ இத்தாலி மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.

விரைவில் மீண்டு வருவோம்

விரைவில் மீண்டு வருவோம்

இத்தாலியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவைரஸிடம் சிக்கி உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து இத்தாலி மீண்டு வர எத்தனை காலமாகும் என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் தங்கள் கவனத்தை விளையாட்டு உள்ளிட்டவற்றில் திருப்பி தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Story first published: Sunday, April 19, 2020, 14:08 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Two young girls playing Tennis in their house roof top in Italy video goes viral
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X