For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலிறுதியில் ஷெல்பி ரோஜர்சை பழிதீர்த்துக் கொண்ட நவோமி ஒசாகா.. அரையிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க் : நியூயார்க்கில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Recommended Video

ஐ.பி.எல் 2020ல் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் !

காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்சை 6க்கு 3 மற்றும் 6க்கு 4 என்ற நேரடி செட்களில் தோற்கடித்து அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை ரோஜர்சுடன் மோதிய ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாத நிலையில், தற்போதைய போட்டியில் வெற்றி கொண்டதன்மூலம் அவரை பழிதீர்த்துக் கொண்டதாக ஒசாகா தெரிவித்துள்ளார்.

என்னா அடி.. ஈவு இரக்கமே இல்லாமல் 5வது ஓவரில் சேஸிங்கை முடித்த செயின்ட் லூசியா.. தரமான சம்பவம்!என்னா அடி.. ஈவு இரக்கமே இல்லாமல் 5வது ஓவரில் சேஸிங்கை முடித்த செயின்ட் லூசியா.. தரமான சம்பவம்!

அரையிறுதிக்கு முன்னேறிய ஒசாகா

அரையிறுதிக்கு முன்னேறிய ஒசாகா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா காலிறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்சை 6க்கு 3 மற்றும் 6க்கு 4 என்ற நேரடி செட் கணக்கில் தோல்வியை தழுவ செய்துள்ளார். விறுவிறுப்பான இந்த போட்டியை அடுத்து அவர் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜெனிபர் பிராடியுடன் மோதல்

ஜெனிபர் பிராடியுடன் மோதல்

ஒரு மணிநேரம் மற்றும் 20 நிமிடங்களில் இந்த போட்டி நிறைவடைந்தது. சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள ஒசாகா, யுஎஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை நாளை எதிர்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என்று அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பழிதீர்த்துக் கொண்ட ஒசாகா

பழிதீர்த்துக் கொண்ட ஒசாகா

9வது இடத்தில் இருந்தாலும் 93வது இடத்தில் உள்ள ஷெல்பி ரோஜர்சுடன் அவர் மோதிய போட்டிகளில் அவர் தொடர்ந்து தோல்வியையே தழுவியுள்ளார். அவருடன் தோல்வியடைந்த போட்டிகள் தன்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும் தற்போது அவரை காலிறுதியில் தோற்கடித்ததன்மூலம் அவரை தான் பழிதீர்த்துக் கொண்டதாகவும் ஒசாகா தெரிவித்துள்ளார்.

விதவிதமான மாஸ்க் அணியும் ஒசாகா

விதவிதமான மாஸ்க் அணியும் ஒசாகா

இதனிடையே ஒசாகாவுடன் நாளை மோதவுள்ள பிராடி காலிறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தானை சேர்ந்த யுலியா புடின்சேவாவை 6க்கு 3 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார். கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டின் கொலைக்கு நியாயம் கோரி ஒசாகா, இந்த தொடரில் வித்தியாசமான மாஸ்க்குகளை அணிந்து தன்னுடைய எதிர்ப்பை காட்டி வருகிறார்.

Story first published: Wednesday, September 9, 2020, 16:31 [IST]
Other articles published on Sep 9, 2020
English summary
I'm really glad I was able to have a much better positive attitude today -Osaka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X