பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியிலிருந்து வீனஸ் வில்லியம்ஸ் நீக்கம்

வரும் 6ம் தேதி துவங்கவுள்ள பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியிலிருந்து விம்பிள்டன் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்களன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் சரியாக விளையாடாததால் வீனஸ் வில்லியம்ஸ் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அடிலெய்டு இன்டர்நேஷனல் போட்டியில் தான் பங்கேற்பேன் என்று வீனஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வில்லியம்ஸ் சகோதரிகள்

வில்லியம்ஸ் சகோதரிகள்

5 முறை விம்பிள்டன் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் அவரது சகோதரி செரினா வில்லியம்ஸ் இருவரும் டென்னிஸ் உலகில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் வில்லியம்ஸ் சகோதரிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய வீனஸ்

பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய வீனஸ்

இந்நிலையில் பிரிஸ்பேனில் வரும் 6ம் தேதி துவங்கவுள்ள பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டிக்காக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் சிறந்த ஆட்டத்தை ஆட தவறினார்.

மாற்று வீராங்கனை நாளை அறிவிப்பு

மாற்று வீராங்கனை நாளை அறிவிப்பு

இந்நிலையில், பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டிகளில் இருந்து வீனஸ் வில்லியம்ஸ் நீக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மாற்றாக ஆடும் வீராங்கனை குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வீனஸ் வில்லியம்ஸ் நம்பிக்கை

வீனஸ் வில்லியம்ஸ் நம்பிக்கை

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வீனஸ் வில்லியம்ஸ், பயிற்சி ஆட்டத்தில் தான் சரியாக விளையாடாததால் பிரிஸ்பேன் போட்டியில் ஆடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாகவும், ஆனால் இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள அடிலெய்டு இன்டர்நேஷனல் தொடரில் தான் விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போட்டி கடுமையாக இருக்கும்

போட்டி கடுமையாக இருக்கும்

பிரிஸ்பேன் போட்டியில் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லெய்க் பார்டி மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் நயோமி ஒசாகா ஆகியோர் விளையாட உள்ளதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டியே வீனஸ் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Venus Williams pulled out of Brisbane International
Story first published: Wednesday, January 1, 2020, 19:34 [IST]
Other articles published on Jan 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X