23 கிலோ அதிகரிச்சேன்... 26 கிலோ குறைச்சேன்... திரும்ப விளையாடுவேனான்னு டவுட் இருந்துச்சு!

டெல்லி : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய கர்ப்பகாலம் குறித்த நினைவுகளை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய கர்ப்ப காலத்தில் தான் 23 கிலோ எடை அதிகரித்ததாகவும் மீண்டும் விளையாட முடியுமா என்ற சந்தேகம் இருந்ததாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் செரீனா வில்லியம்சை உதாரணமாக கொண்டு தான் குழந்தை பிறப்பிற்கு பிறகு 26 கிலோ எடையை குறைத்து மீண்டும் விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2018ல் குழந்தை பிறப்பு

2018ல் குழந்தை பிறப்பு

கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2018ல் இஷான் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து கடந்த 2020ல் மீண்டும் விளையாடிய அவர் உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சேனாக்குடன் இணைந்து ஹோபர்ட் இன்டர்நேஷனல் 2020 பெண்கள் இரட்டையர் பிரிவு கோப்பையை வென்றார்.

சிறந்த நபராக உணர்ந்தேன்

சிறந்த நபராக உணர்ந்தேன்

இந்நிலையில், தன்னுடைய கர்ப்ப காலம் மற்றும் குழந்தையை பெற்றெடுத்தது தன்னை மிகச்சிறந்த நபராக உணர வைத்ததாக சானியா மிர்சா குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவை பகிர்ந்துள்ள அவர், தான் கர்ப்பமாக இருந்தபோது 23 கிலோ எடை அதிகரித்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.

சானியாவிற்கு எழுந்த சந்தேகம்

சானியாவிற்கு எழுந்த சந்தேகம்

இதையடுத்து தான் மீண்டும் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்ததாகவும், ஆனால் குழந்தை பிறப்பிற்கு பிறகு முறையான பயிற்சிகள் மற்றும் டயட்டை மேற்கொண்டு 26 கிலோ எடை குறைந்ததாகவும் இதையடுத்து தான் மீண்டும் டென்னிஸ் உலகில் கால்பதித்து வெற்றியை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

சானியா உத்வேகம்

சானியா உத்வேகம்

டிஸ்கவரி ப்ளசில் செரீனா வில்லியம்சின் 'பீயிங் செரீனா' என்ற டாகுமெண்டரி படத்தை பார்த்து உத்வேகம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சானியா மிர்சா, இதையடுத்து தான் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் குறித்து இந்த பதிவை பகிர்நதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Getting back to shape and form after pregnancy can be a challenge -Sania mirza
Story first published: Wednesday, November 25, 2020, 18:15 [IST]
Other articles published on Nov 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X