ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா

டெல்லி : ரசிகர்கள் இல்லாமல் டென்னிஸ் போட்டிகளை விளையாடியது மிகவும் விசித்திரமான அனுபவம் என்று இரண்டு முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற பெட்ரா க்விடோவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிசில் 12வது இடத்தில் உள்ள பெட்ரா க்விடோவா, கடந்த வாரத்தில் நடைபெற்ற அனைத்து செக் எக்சிபிஷன் தொடரில் வெற்றி பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் அனைத்து தொடர்களும் முடங்கிய நிலையில், தற்போது இந்த தொடர் காலி மைதானங்களில் நடத்தப்பட்டுள்ளது.

எச்சிலுக்கு மாற்றுவழி கண்டுபிடிச்சாகணும்ய்யா.. இல்லாட்டி எப்படி.. பும்ரா

பெட்ரா க்விடோவா அதிருப்தி

பெட்ரா க்விடோவா அதிருப்தி

சர்வதேச டென்னிசில் 12வது இடத்தில் உள்ளவர் பெட்ரா க்விடோவா. இரண்டு விம்பிள்டன் பட்டங்களுக்கு சொந்தக்காரரான இவர், ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் போட்டிகளை விளையாடுவதற்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறார். இருந்தாலும், போட்டிகளே இல்லாமல் இருப்பதற்கு போட்டிகள் துவங்கப்பட்டு நடத்தப்படுவது சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

விசித்திரமாக இருந்தது

விசித்திரமாக இருந்தது

இந்நிலையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற அனைத்து செக் எக்சிபிஷன் தொடரில் இவர் வெற்றி பெற்றுள்ளார். ரசிகர்கள் இல்லாமல் விளையாடியது விசித்திரமாக இருந்ததாகவும் க்விடோவா தெரிவித்துள்ளார். ஆயினும் திரும்பவும் போட்டிகளில் பங்கேற்றது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.

கைகுலுக்காமல் ஆட்டம்

கைகுலுக்காமல் ஆட்டம்

ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் நடத்தப்பட்ட முதல் போட்டியில் விளையாடியபோது தன்னுடைய கவனம் ஆட்டத்தில் செல்லவில்லை என்றும், தனக்கு டவல் எடுத்துக்கொடுக்கக் கூட ஆளில்லாமல், வெற்றியின்போது கைகுலுக்காமல் விளையாடியது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ள க்விடோவா, அரையிறுதி போட்டியின்போதே தான் ஆட்டத்தில் முழுகவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனித்திருத்தல் கடுமையானது

தனித்திருத்தல் கடுமையானது

வரும் ஆகஸ்ட் மாதத்தில் டென்னிஸ் தொடர்கள் துவங்கப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆயினும் வெளிநாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு தனித்திருக்க வேண்டும் என்ற முடிவு மிகவும் கடுமையானது என்றும் தெரிவித்துள்ளார். ஆயினும் போட்டிகள் இல்லாமல் இருப்பதற்கு மீண்டும் துவங்கப்படுவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
It is tough to mentally prepare for the event -Petra Kvitova
Story first published: Tuesday, June 2, 2020, 10:55 [IST]
Other articles published on Jun 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more