For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஸ்டர்ன் & சதர்ன் ஓபன்.. நோவாக் ஜோகோவிக் வெற்றி.. 2020இல் தோல்வியே அடையாமல் சாதனை!

நியூயார்க் : அமெரிக்காவில் நடந்து வரும் வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிக் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

2020ஆம் ஆண்டு அவர் தோல்வியே அடையாமல் வெற்றிப் பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் இறுதிப் போட்டியில் அவர் மிலாஸ் ரோனிக்கை சந்தித்தார். முதல் சுற்றில் 1 - 6 என தோல்வி அடைந்தாலும், அதன் பின் 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.

Western and Southern Open final : Novak Djokovic beat Milas Raonic

இது நோவாக் ஜோகோவிக்கின் 80வது பட்டம் ஆகும். ஏற்கனவே, 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிக், 2020ஆம் ஆண்டில் தொடர்ந்து 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.

மேலும், மாஸ்டர்ஸ் 1000 தொடரில் 35வது பட்டத்தை வென்று, ரபேல் நடாலின் சாதனையைசமன் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல முன்னணி வீரர்கள் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாசம்... இடைவெளியை பூர்த்தி செய்ய நல்லா பிராக்டீஸ் செய்யணும்.. விராட் கோலி தீவிரம்5 மாசம்... இடைவெளியை பூர்த்தி செய்ய நல்லா பிராக்டீஸ் செய்யணும்.. விராட் கோலி தீவிரம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன் நடைபெறும் இந்த தொடர், அந்த கிராண்ட்ஸ்லாம் தொடருக்கான பயிற்சிக் களமாகவும் அமைந்தது.

அமெரிக்க ஓபன் தொடரிலும் நோவாக் ஜோகோவிக் தன் வெற்றிப் பயணத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 30, 2020, 14:06 [IST]
Other articles published on Aug 30, 2020
English summary
Western and Southern Open final : Novak Djokovic beat Milas Raonic 1-6, 6-3, 6-4 and continuing his unbeaten run in 2020.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X