விம்பிள்டன்னை மட்டும் ஏன்பா விட்டுவைக்கப் போறாங்க... அதையும் கேன்சல்தான் செய்வாங்க

லண்டன் : சர்வதேச அளவில் ஏறக்குறைய அனைத்து டென்னிஸ் போட்டிகளும் வரும் ஜூன் 7ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் ஏமாற்றமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

விம்பிள்டன் போட்டிகள் குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று அனைத்து இங்கிலாந்து கிளப் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்று விம்பிள்டன்னின் கலப்பு இரட்டையர் பிரிவில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜாமி முர்ரே தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டி விம்பிள்டன்னில், டைட்டிலை வெல்வது என்பது அனைத்து டென்னிஸ் வீரர்களின் கனவாக உள்ளது. இதற்கென விம்பிள்டன் போட்டிகளில் அவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க ஓபன், இந்தியன் வெல்ஸ், பிரெஞ்ச் ஓபன் தொடர் உள்ளிட்ட போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை ரசிகர்கள் இல்லாத ஸ்டேடியத்தில் விம்பிள்டன் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விம்பிள்டன் போட்டிகள் நடைபெறுவதும் சிக்கலாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இன்று அனைத்து இங்கிலாந்து கிளப் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்ற தான் நம்புவதாக ஜாமி முர்ரே தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நீட்டிச்சிதான் ஆகனும்... இல்லன்னா அத நடத்துறதுல அர்த்தமே இல்லஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நீட்டிச்சிதான் ஆகனும்... இல்லன்னா அத நடத்துறதுல அர்த்தமே இல்ல

விம்பிள்டன் போட்டிகளில் தனிநபர் பிரிவில் இரண்டுமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆன்டி முர்ரேவின் சகோதரர் ஜாமி முர்ரே. இவர் கடந்த 2015ல் இறுதிப்போட்டிவரை வந்தவர். இதேபோல இரட்டையர் பிரிவில் இருமுறை சாம்பியன் பட்டங்களை வென்றவர்.

இவர் விம்பிள்டன் போட்டிகளை மறுபடியும் திட்டமிடுவது மிகவும் கடுமையான செயல் என்று கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Wimbledon organisers have ruled out playing the two-week tournament
Story first published: Wednesday, April 1, 2020, 11:58 [IST]
Other articles published on Apr 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X