For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

25 வயதில் ஓய்வு.. உலகை அதிரவைத்த நம்.1 டென்னிஸ் வீராங்கனை ஆஷ் பார்டி..காரணம் கேட்டு வியந்த ரசிகர்கள்

ஆஸ்திரேலியா: உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆசுலி பார்டி, 25 வயதில் ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லெய்க் பார்டி.

இளம் வயதில் இவ்வளவு சாதனைகள் செய்ய முடியுமா என டென்னிஸ் ரசிகர்களை புருவம் உயர்த்தி பார்க்கின்றனர்.

3 பெரும் ஏமாற்றங்கள்.. ஐபிஎல் தொடக்கத்திலேயே தோனிக்கு வந்த சோதனை.. சிஎஸ்கே எப்படி மீளப்போகிறது?? 3 பெரும் ஏமாற்றங்கள்.. ஐபிஎல் தொடக்கத்திலேயே தோனிக்கு வந்த சோதனை.. சிஎஸ்கே எப்படி மீளப்போகிறது??

அடுத்தடுத்து பட்டங்கள்

அடுத்தடுத்து பட்டங்கள்

இதுவரை பார்டி விளையாடியுள்ள டென்னிஸ் தொடர்களில் 15 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 2019ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் 2021ம் ஆண்டில் ஃப்ரெஞ்ச் ஓபன் என அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஆஷ் பார்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், வாழ்கையில் எனக்கு பல கனவுகளை துரத்தில் சாதிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இதற்கு மேலும், என்னால் முடியாது என நினைக்கிறேன். ஏனென்றால் பயணங்கள் என்னை சோர்வடைய செய்துவிட்டன.

வாழ்கையின் 2வது பாதி

வாழ்கையின் 2வது பாதி

குடும்பத்தினர் மற்றும் எனது வீடு தான் மிகவும் பிடித்தவை. அவர்களை இனியும் நீண்ட நாட்கள் பிரிந்திருக்க முடியாது என்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன். இதற்காக டென்னிஸ்ஸின் மீதான காதல் குறையாது. என் வாழ்வில் மிகப்பெரிய பங்காக டென்னிஸ் தான் இருந்து வருகிறது. இனி மற்றொரு பங்கை வாழ போகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

2வது ஓய்வு அறிவிப்பு

2வது ஓய்வு அறிவிப்பு

டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்த 2வது ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் பார்டி ஆகும். இவர் கடந்த 2 ஆண்டிற்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் 2016ல் மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கு வந்து முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 23, 2022, 11:03 [IST]
Other articles published on Mar 23, 2022
English summary
World No.1 Tennis Star Ashleigh Barty announces her retirement, here is the reason
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X