பெங் சூயி மாயமான விவகாரம்- சீனாவில் மகளிர் டென்னிஸ் போட்டிகள் அதிரடியாக ரத்து..!!

பெய்ஜிங்; சீன முன்னாள் துணை அதிபர் சாங் கயோலி மீது Me too புகார் ஒன்றை சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் சூயி கூறியிருந்தார்.

புகார் கூறிய சில மணி நேரத்திலேயே பெங் சூயி மாயமான தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பெங் சூயி அளித்த புகார் தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையத்தளத்திலிருந்து சீனா நீக்கியது.

இது தொடர்பாக தங்களது கவலையை வெளிப்படுத்திய சர்வதேச மகளிர் டென்னிஸ் சம்மேளனம், பெங் சூயியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது

கிரிக்கெட்டை பாதித்த ஓமைக்ரான்..இந்திய அணியின் அடுத்த 2 மாத திட்டம் ரத்தாகிறதா? கங்குலி கூறிய தகவல்!கிரிக்கெட்டை பாதித்த ஓமைக்ரான்..இந்திய அணியின் அடுத்த 2 மாத திட்டம் ரத்தாகிறதா? கங்குலி கூறிய தகவல்!

பெங் சூயின் எங்கே?

பெங் சூயின் எங்கே?

டென்னிஸ் வீராங்கனை மாயமானது குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். பெங் சூயி எங்கே என்ற ஹேஷ்டேக் மூலம் அவர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர். ஆனால், இது குறித்து சீன அரசு கண்டுகொள்ளவே இல்லை.இது தொடர்பாக உலக நாடுகள் அழுத்தம் கொடுத்த நிலையில்,பெங் சூயி தொடர்பான வீடியோக்களை சீனா வெளியிட்டது.

வீடியோ கால்

வீடியோ கால்

இந்த வீடியோக்களின் உண்மை தன்மையை அறிய முடியவில்லை என்று சர்வதேச டென்னிஸ் மகளிர் சம்மேளனம் கூறியிருந்தது. இந்த நிலையில், சீனாவிலிருந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நீக்கிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஒலிம்பிக் சம்மேளத் தலைவரிடம் பெங் சூயி வீடியோ காலில் பேசியது போன்ற புகைப்படத்தை சீனா வெளியிட்டது.

சந்தேகம்

சந்தேகம்

மேலும் பெங் சூயிடமிருந்து மெயில் ஒன்றும் வந்துள்ளதாக செய்திகள் வெளியானது தாம் நலமுடன் இருப்பதாகவும், என்னை பற்றி செய்திகள் வெளியிடும் போது என்னிடம் அனுமதி பெறுங்கள் என்பது போல் அந்த மெயில் இருந்தது. இதன் உண்மை தன்மையும் தெரியவில்லை. இதுவரை பெங் சூயி தங்களிடம் பேசவில்லை என்றும், அவர் பனைய கைதி போல் இருப்பதாகவும் சர்வதேச மகளிர் டென்னிஸ் சம்மேளனம் கூறியுள்ளது.

ரத்து

ரத்து

இதனால் கடுப்பான சர்வதேச மகளிர் டென்னிஸ் சம்மேளனம், சீனாவில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர்களை ரத்து செய்து, வேறு இடத்தில் நடத்துவதாக அறிவித்துள்ளது. WTA வின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் மீது தொடர்ந்து அவதூறு செலுத்தும் விதமாக WTA அமைப்பு நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளது. WTA தொடரை ரத்து செய்வதன் மூலம் சீனாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
WTA Cancells Tournaments in China due to Peng shuai Issue. China didn’t clears air on Peng shaui. So WTA Decides to cancel the tournaments
Story first published: Thursday, December 2, 2021, 13:08 [IST]
Other articles published on Dec 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X