For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி

சர்வதேச அளவிலான பெண்கள் டென்னிஸ் அசோசியேஷனின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தோல்வியடைந்தாலும், தன்னுடைய முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை வென்றுள்ள அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் விடுவிடுவென முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 10 இடத்திற்கு கீழிறங்கியுள்ளார். இதேபோல 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 9வது இடத்தில் உள்ளார்.

 வெங்காயம், உருளைக்கிழங்கு விப்பீங்க... கிரிக்கெட் ஆட மாட்டீங்களா - அக்தர் கேள்வி வெங்காயம், உருளைக்கிழங்கு விப்பீங்க... கிரிக்கெட் ஆட மாட்டீங்களா - அக்தர் கேள்வி

முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ

முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ

சர்வதேச அளவிலான பெண்கள் டென்னிஸ் அசோசியேஷனின் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய டென்னிஸ் விராங்கனை ஆஷ்லீ பார்டி தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் விளையாடி தோல்வியை தழுவினாலும் தனது முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார்.

வெற்றி பெற்ற ஆஷ்லீ

வெற்றி பெற்ற ஆஷ்லீ

கடந்த மாதம் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை போட்டியின் அரையிறுதியில் சோபியா கெனினிடம் 7க்கு 6 மற்றும் 7க்கு 5 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.

7வது இடத்திற்கு முன்னேற்றம்

7வது இடத்திற்கு முன்னேற்றம்

இதனிடையே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் டைட்டிலை வெற்றிகொண்ட அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் பரபரவென மேலேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை வெற்றி கொண்டு கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தை பிடித்த சிமோனா ஹாலெப்

2வது இடத்தை பிடித்த சிமோனா ஹாலெப்

டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியலில் ஆஷ்லீயை தொடர்ந்து இரண்டாவது இடத்தை ருமேனியாவின் சிமோனா ஹாலெப் பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் செக் குடியரசின் கரோலினா பிஸ்கோவா உள்ளார். இதேபோல 4வது இடத்தில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கும் ஐந்தாவது இடத்தில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்குவும் உள்ளனர்.

செரீனாவிற்கு 9வது இடம்

செரீனாவிற்கு 9வது இடம்

இந்நிலையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா சரசரவென கீழிறங்கி 10வது இடத்தில் உள்ளார். இதேபோல 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் 9வது இடத்தில் உள்ளார். குழந்தை பேறுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய ஓபனை கைகொள்ள மிகுந்த பிரயத்தனப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 18, 2020, 19:02 [IST]
Other articles published on Feb 18, 2020
English summary
Ashleigh Barty retained her no.1 spot in the Rankings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X