Impact Player விதிமுறை என்றால் என்ன? ஐபிஎல் அணிகளுக்கு ஆப்பு - விவரம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள ‘இம்பேக்ட் ப்ளேயர்’ விதிமுறை குறித்த முழு விளக்கத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Saravanamanoj M
ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது.
அந்தவகையில் 203ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் ஒவ்வொரு அணியிலும் 13 வீரர்கள் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இம்பேக்ட் விதிமுறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை இம்பேக்ட் ப்ளேயர் களத்திற்கு வந்துவிட்டால், அவருக்காக வெளியேற்றப்படும் வீரர் அதன்பிறகு அந்த ஆட்டத்திற்குள் வரவே முடியாது. சப்ஸ்டிடியூட் வீரராக கூட உள்ளே வர முடியாது.
ஒவ்வொரு அணி கேப்டனும் டாஸின் போதே ப்ளேயிங் 11 மட்டுமின்றி 4 சப்ஸ்டிடியூட் வீரர்களை அறிவிக்க வேண்டும். அதில் இருந்து ஒரே ஒரு வீரரை மட்டும் இம்பேக் ப்ளேயராக அறிவித்து கேப்டன்கள் அழைத்து வரலாம்.
ஆனால் இம்பேக்ட் ப்ளேயராக ஒரு அணியின் கேப்டனோ, அயல்நாட்டு வீரர்களோ இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அயல்நாட்டு வீரரை இம்பேக்ட் ப்ளேயராக பயன்படுத்த விரும்பினால் ப்ளேயிங் 11ல் 3 அயல்நாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடியிருக்க வேண்டும்.
பேட்டிங் அணி ஒரு ஓவர் முடிந்த பிறகு இம்பேக் ப்ளேயரை வரவழைத்துக்கொள்ளலாம். பவுலிங் அணி முதல் விக்கெட் விழுந்த பிறகு இம்பேக் ப்ளேயரை அழைத்துக்கொள்ள முடியும்.
பேட்டிங் அணி ஆட்டத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் 13வது வீரரை பயன்படுத்த முடியும். ஆனால் பவுலிங் அணியால் ஓவர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து, மீதமுள்ள பந்துகளை வீச வைக்க முடியாது.