மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு.. இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி ஜெர்ஸி.. யார் கொடுத்த ஐடியா?

இந்திய கிரிக்கெட் அணியின் மாற்று உடையாக காவி நிற ஜெர்சி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.


Recommended Video

ICC WC 2019: இந்திய அணிக்கு காவி ஜெர்ஸி.. யார் கொடுத்த ஐடியா?- வீடியோ

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் மாற்று உடையாக காவி நிற ஜெர்சி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. உலகமே இந்த கிரிக்கெட் தொடரைத்தான் தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது.

Explore Now: Cricket World Cup Action LIVE!
Advertisement

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் கால் பந்தில் இருப்பது போலவே புதிய விதிகள் சில அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஜெர்ஸி மாற்றுவது.

தம்பி..!! கைய இப்படி வச்சுக்கோ...!! நேரா பந்துவீசு.. ஆங்.. சூப்பர்..!! அப்படித்தான்..!!

என்ன ஜெர்ஸி

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து ஹோம் அணி. அதேபோல் பாகிஸ்தானும் ஹோம் அணி. இதனால் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் தங்களது ஜெர்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் தங்கள் ஜெர்ஸியை மாற்ற தேவையில்லை.

ஆனால் என்ன

ஆனால் உலகக் கோப்பையில் விளையாடும் மற்ற அணிகள் தங்கள் ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்ற வேண்டும். உதாரணமாக இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இதனால் இந்த அணிகள் மோதும் போது ஒரே நிற ஜெர்ஸிக்கு பதிலாக மாற்று ஜெர்சியை அணிய வேண்டும்.

Advertisement
இன்னும் இல்லை

இதில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து ஆகியவை தனித்துவமான வண்ணங்களை கொண்டு இருப்பதால் ஜெர்ஸி மாற்ற தேவையில்லை. இதனால் மீதம் இருக்கும் இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சில போட்டிகளுக்கு ஜெர்ஸி மாற்ற வேண்டி இருக்கும்.

Advertisement
இந்தியா இன்னும் இல்லை

இதில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்களது புதிய ஜெர்ஸி எது என்று அறிவித்துவிட்டது. ஆனால் இந்தியா இன்னும் தனது புதிய ஜெர்ஸியை அறிவிக்கவில்லை. இந்தியா கண்டிப்பாக காவி நிற ஜெர்ஸி உடுத்த போகிறது என்பதும் உறுதியாகி உள்ளது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியாகவில்லை.

ஏன் காவி

காவி நிறத்தை தேர்வு செய்ய முக்கிய காரணம் இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய நீல நிற உடையில் காவி நிறத்தில் கோடுகள் இருக்கும். அதேபோல் காவி நிறத்தில் இந்தியா என்று எழுதி இருக்கும். அதை அப்படியே மாற்றி காவி நிறத்தில் ஜெர்ஸியை உருவாக்கி நீல நிறத்தில் கோடுகளை போட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

யார் ஐடியா

தற்போது பாஜக கட்சி ஆட்சி செய்து வருவதால் இது மத்திய அரசு கொடுத்த ஐடியாவா, காவி நிறத்தை அவர்கள்தான் பயன்படுத்த சொன்னதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது பிசிசிஐ சுயமாக எடுத்த முடிவு என்கிறார்கள். பிசிசிஐ தலைமை குழுவில் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது. பல மாதங்களாகவே இந்த காவி நிற ஜெர்சி பிளான் இருந்ததாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

English Summary

ICC Cricket World Cup 2019: Why BCCI chooses a saffron color for the Indian team jersy?