Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்.. இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து !

கவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் இறுதிப்போட்டி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.

ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இன்று, ஹாங்காங் வீராங்கனை சியூங் கான் யி-யை எதிர்கொண்டார்.

 Ace Indian shuttler P.V Sindhu reaches final of Hong Kong Open

பரபரப்பான இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து முதல் செட்டை 21-14 என கைப்பற்றினார். 2வது செட்டை 21-16 என்ற கணக்கில் வென்றார். முடிவில் 21-14,21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் - ஐ சந்திக்கிறார் பி.வி.சிந்து.

முன்னதாக நடைபெற்ற காலியிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை ஜியாவ் லியாங்கை எதிர் கொண்டு வெற்றி பெற்றார் பி.வி.சிந்து.

Story first published: Saturday, November 26, 2016, 19:19 [IST]
Other articles published on Nov 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+