ஆல் இங்கிலாந்து ஓபன் கனவு தகர்ந்தது.. காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி!
லண்டன் : ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் தைவான் நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை டாய் சூ யிங்-ஐ சந்தித்தார் சாய்னா.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 15-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார். மிகவும் திறமையாக ஆடிய சூ யிங்-கின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத சாய்னா, தவறுகள் செய்ய, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற்றார் சூ யிங்.
இந்த தோல்வி மூலம், ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் முதல் பட்டம் வெல்லலாம் என்ற சாய்னாவின் கனவு தகர்ந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு இறுதி வரை முன்னேறிய சாய்னா நேவால், அதில் தோல்வி அடைந்தார். இந்த முறை காலிறுதியுடன் வெளியேறி உள்ளார் சாய்னா நேவால்.
ஆல் இங்கிலாந்து ஓபனில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பட்டம் வென்றதில்லை என்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications