தமிழக பேட்மிண்டன் சங்கத் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடி நீக்கம்
சென்னை: தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் பொருளாளர் ராஜ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பேட்மிண்டன் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். அத்துடன் தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தி வந்தார்.
இதனையடுத்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எங்கே போனது எனத் தெரியவில்லை.
இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.
Story first published: Monday, August 1, 2016, 9:05 [IST]
Other articles published on Aug 1, 2016


Click it and Unblock the Notifications