For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து ஏமாற்றினார்...பாட்மிண்டன் இறுதியில் தோற்று வெள்ளி வென்றார்

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டா சூயிங்-கிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளி மட்டுமே கிடைத்தது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பி.வி.சிந்து பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். முதன் முறையாக ஆசிய விளையாட்டில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து சிந்து தங்கம் வென்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Asian Games 2018 – P.V.Sindhu lost in the badminton finals won silver

எனினும், இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீன தைபெய் நாட்டின் டா சூயிங் 21-13, 21-16 என்ற கேம்களில் வென்றார்.

இந்த ஆண்டில் எந்த இறுதிப் போட்டியிலும் வெல்லாத பி.வி.சிந்து, மீண்டும் ஒரு முறை இறுதியில் தோல்வி அடைந்து பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தினார்.

இந்தியாவின் மற்றொரு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலம் மட்டுமே வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பத்தாம் நாள், ஆசிய விளையாட்டில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

Story first published: Tuesday, August 28, 2018, 13:25 [IST]
Other articles published on Aug 28, 2018
English summary
Asian Games 2018 – P.V.Sindhu lost in the badminton finals won silver
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+