For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு : பாட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா நேவால் தோல்வி...வெண்கலம் வென்றார்

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியா சார்பாக பி.வி.சிந்து, சாய்னா நேவால் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

அதில் முதல் அரையிறுதியில் பங்கேற்ற சாய்னா தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவருக்கு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. அரையிறுதியில் சீன தைபெய்-இன் டாய் சூயிங்-ஐ எதிர்கொண்டார்.

Asian Games 2018 - Saina Nehwal lose in semis and settles with Bronze

அந்த போட்டியில் 21-17, 21-14 சூயிங் வென்றார். 36 நிமிடங்களே நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா தோல்வி அடைந்தார். இதனால், காலிறுதி வெற்றி மூலம் உறுதியான வெண்கலம் கிடைத்தது.

இந்தியாவுக்கு இது 37வது பதக்கமாகும். மேலும், பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் 36 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் முதல் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018

அடுத்து பி.வி.சிந்து அரையிறுதியில் பங்கேற்க உள்ளார். அவர் ஜப்பானின் அகானே யாமாகுச்சி-ஐ சந்திக்கிறார். இந்த போட்டியில் சிந்து வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Story first published: Monday, August 27, 2018, 11:48 [IST]
Other articles published on Aug 27, 2018
English summary
Asian Games 2018 - Saina Nehwal lose in semis and settles with Bronze
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+