மீண்டும் முதலிடத்தில் சாய்னா!
டெல்லி: சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் சர்வதேச அளவிலும், தரவரிசைப் ட்டியலிலும் முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

பின்னர் சாய்னா நேவால் மலேசிய ஓபன் அரையிறுதியில் தோல்வியை தழுவியதால் உலகத்தர வரிசை பட்டியலில் பிடித்த முதலிடத்தை இழந்து மீண்டும் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்ட்டார் சாய்னா.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் வரும் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மீண்டும் சாய்னா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் கடந்த முறை சாம்பியனான சாய்னா இந்த முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க இந்த முதலிடம் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, 12-வது இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 4-வது இடத்தையும், காஷ்யப் தனது 13-வது இடத்தையும் தக்கவைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications