Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஹைதராபாத் : பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

பாட்மிண்டன் அரங்கில் இந்தியாவில் முதன்முதலில் பல உயரங்களை தொட்டவர் சாய்னா நேவால். பல ஆண்டுகளாக தொடர்ந்து பாட்மிண்டன் ஆடி வரும் அவர், சக பாட்மிண்டன் விளையாட்டு வீரரான பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருகிறார் என கிசுகிசுக்கள் வலம் வந்தன.

Badminton Stars Saina Nehwal and Kashyap to wed in december this year

எனினும், அது உறுதிப்படுத்தப்படாமல் நீண்ட காலம் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் அதை மறுக்கவும் இல்லை.

சமீபத்தில், சாய்னா தன் சமூக வலைதள பக்கங்களில் காஷ்யப்பின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டார். அதை தொடர்ந்து இப்போது திருமண செய்தி கசிந்துள்ளது. திருமணம் வரும் டிசம்பர் 16 என்றும், அதை தொடர்ந்து வரவேற்பு விழா டிசம்பர் 21 அன்று நடைபெறும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் அவர்களின் உறவினர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2005ஆம் ஆண்டு பயிற்சியாளர் கோபிசந்த்திடம் பயிற்சி பெறும் போது தான் இருவரும் முதல் முறை சந்தித்துள்ளனர். அதை தொடர்ந்து காஷ்யப், சாய்னாவின் நண்பர், பயிற்சியில் உதவி புரிபவர் என்ற வகையிலேயே மற்றவர்கள் நினைத்து வந்தனர். ஒருவழியாக, அவர்களின் நீண்ட கால காதல், திருமணத்தில் முடிய உள்ளது.

Story first published: Wednesday, September 26, 2018, 16:18 [IST]
Other articles published on Sep 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+