ஜூவாலா கட்டா மீதான நடவடிக்கைகள் ரத்து
டெல்லி: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா மீதான நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக எடுக்கப்படவிருந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டியின் போது, பங்கா பீட்ஸ் அணி சார்பாக டென்மார்க் வீரர் ஒருவர் களமிறங்க டில்லி அணி கேப்டன் ஜுவாலா கட்டா எதிர்ப்பு தெரிவித்ததாக புகார் எழுந்தது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஜுவாலா கட்டா மீதான புகார் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை, இந்தியன் பேட்மிண்டன் சங்கம் நியமித்தது. இதில் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஜூவாலா கட்டாவிற்கு எதிராக எடுக்கப்படவிருந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 7-ம் தேதி சியோலில் தொடங்கும் கொரிய ஓபன் டென்னிஸ் ஜூவாலா கட்டா விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications