வரலாற்றிலேயே முதல் முறையாக அசத்திய இந்திய ஆண்கள்..!! பி.வி.சிந்து திக்..திக்..

வெல்வா: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நடப்பு சாம்பியனாக பி.வி.சிந்து களமிறங்கினார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த தொடர் நடைபெறவில்லை.

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான தாய் சூயிங்கை எதிர்கொண்டார்

“தோனியின் வியூகம் இனி எடுபடாது” சிஎஸ்கேவின் 3 முக்கிய வீரர்களை குறிவைத்த அணிகள்.. யாரென்று தெரியுமா “தோனியின் வியூகம் இனி எடுபடாது” சிஎஸ்கேவின் 3 முக்கிய வீரர்களை குறிவைத்த அணிகள்.. யாரென்று தெரியுமா

சிந்துவுடன் மோதல்

சிந்துவுடன் மோதல்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தாய் சூயிங் காலிறுதி சுற்றை தாண்டியதே இல்லை. இதனால் வெற்றி பெற வேண்டும் என்ற முணைப்பில் விளையாடினார். மேலும் கடந்த முறை, இதே சுற்றில் சிந்துவிடம் அவர் தோல்வியை தழுவினார்.இதனால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளை குவித்தார் தைவான் வீராங்கனை தாய் சூயி.

எதிர்பாராத முடிவு

எதிர்பாராத முடிவு

தாய் சூயிவின் ஆட்டத்திற்கு சிந்துவும் பதிலடி தர முயன்றார். ஆனால் அது இயலவில்லை. இதனால் முதல் செட்டை பி.வி.சிந்து 17க்கு21 என இழந்தார். 2வது செட்டை சிந்து அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இதிலும் தாய் சூயிங்கின் கையே ஓங்கியிருந்தது. சுமார் 42 நிமிடங்களே நீடித்த இந்தப் போட்டியில் தாய் சூயிங் 21க்கு17,21க்கு13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான சிந்து தோல்வியை தழுவினார்.

ஸ்ரீகாந்த் வெற்றி

ஸ்ரீகாந்த் வெற்றி

பி.வி.சிந்து தோற்றாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி அசத்தினார். காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் மார்கை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த் கிடாம்பி, 21க்கு8, 21க்கு 7 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி, பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.

இந்தியாவுக்கு 2வது பதக்கம்

இந்தியாவுக்கு 2வது பதக்கம்

இதே போன்று 20 வயதான இளம் வீரர் லக்சயா சென், ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில்உலகின் 42வது நிலை வீரருடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21க்கு15,15க்கு21,22க்கு20 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார். இதன் மூலம் லக்சயா சென்னுக்கு பதக்கம் உறுதியானது. அரையிறுதியில் அவர் சக நாட்டு வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோத உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BWF Badminton World champion srikanth assures first Medal, அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி, பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.காலிறுதியில் சிந்து தோல்வியை தழுவினார்
Story first published: Friday, December 17, 2021, 18:24 [IST]
Other articles published on Dec 17, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X