Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று சாதனை படைத்த இந்திய ஆண்கள்..!! பேட்மிண்டன் வரலாற்றிலேயே இது தான் முதல் முறை..!

வெல்வா: உலக பேட்மிண்டன் சாம்பின்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிராகாஷ் படுகோனே 1983ஆம் ஆண்டு வெண்கலம் வென்றார்.

2019ஆம் ஆண்டு சாய் பிரனீத் வெண்கலம் வென்றார். இதை தவிர ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் பெரியதாக சாதித்தது இல்லை.

வரலாற்றில் முதல்முறை

வரலாற்றில் முதல்முறை

ஆனால் வரலாற்றில் முதல் முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர்கள் மோதி கொண்ட ருசிகர சம்பவம் இம்முறை நடந்தது. அரையிறுதியில் இந்தியாவின் 20 வயது இளம் வீரர் லக்சயா சென், மற்றும் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மோதினர்.

லக்செயா சென் ஆதிக்கம்

லக்செயா சென் ஆதிக்கம்

இதனால் இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் லக்சயா சென், அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று ஸ்ரீகாந்த்துக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் செட்டை லக்சயா சென் கைப்பற்றினார்.இதனையடுத்து சுதாரித்து கொண்டு விளையாடிய ஸ்ரீகாந்த், தனது ஆட்டத்தின் ஸ்டலை மாற்றி ஷாட்களை அடித்து புள்ளிகளை பெற்றார்.

ஸ்ரீகாந்த் பதிலடி

ஸ்ரீகாந்த் பதிலடி

சுமார் 69 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியின் முடிவில் 17க்கு21, 21க்கு14, 21க்கு17 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வென்றார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரீகாந்த் படைத்தார். ஸ்ரீகாந்த்துக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் உறுதியானது

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இதே போன்று போட்டியில் தோற்றாலும் லக்சயா சென் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். பி.வி.சிந்துவிற்கு பிறகு அறிமுக தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார்.இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோகியான்யூவை ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.இருவரும் ஏற்கனவே ஒரு முறை மோதியுள்ளனர்.இதில் ஸ்ரீகாந்த் கிடாம்பியே வென்றுள்ளார்.

Story first published: Sunday, December 19, 2021, 11:01 [IST]
Other articles published on Dec 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+