துபாயில் சென்னை பேட்மிண்டன் லீக் போட்டி: நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை லயன்ஸ் மோதல்
துபாய்: துபாயில் நண்பர்கள் கோப்பைக்கான சென்னை பேட்மிண்டன் லீக் போட்டி 13.09.2013 அன்று காலை அல் கிஸஸ் பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை லயன்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ் மற்றும் சென்னை அக்கியூஸ்டு உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்றுள்ளன.

நெல்லை எக்ஸ்பிரஸ் அணியில் பேசன், ரமேஷ், நஸீர், ஹரி, ஸ்வேதாவும், சென்னை லயன்ஸ் அணியில் சமத், சையத் அலி, கிரி, டாக்டர் இளங்கோ, திருமதி. பேசனும், சென்னை ஸ்மாஷர்ஸ் அணியில் தானேஷ், முருகன், பாலாஜி, பிராஸ்பர், அன்புக்கரசியும், சென்னை அக்கியூஸ்டு அணியில் ஃபைசுர், ஸ்ரீராம், ஜீமன், அஃபிக், கங்கா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
லீக் ஆட்டங்கள் காலை 6 மணி முதல் நடைபெற்றன். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 20.09.2013 அன்று காலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை சையது அலி, நஸிர் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு 055 41 45 636 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications