Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கம் வென்றார் சாய்னா நெஹ்வால்-மீண்டும் 2வது இடத்தைப் பிடித்தது இந்தியா

Saina Nehwal
டெல்லி: காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா மீண்டும் 2வது இடத்தைப் பிடிக்க இன்று சாய்னா நெஹ்வால் பெற்ற தங்கம் பேருதவி புரிந்துள்ளது.

நேற்று வரை 2வது இடத்தில் இருந்து வந்தது இந்தியா. ஆனால் கடைசி நேரத்தில் இங்கிலாந்து முந்தி விட்டது. இதனால் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி அபாரமாக ஆடி தங்கப் பதக்கத்தைப் பெற்று 37 தங்கத்துடன் இங்கிலாந்துக்கு சம நிலைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் ஒரு தங்கம் கிடைத்தால் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைக்கும் என்ற நிலையில் ஹாக்கியை அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் ஹாக்கி சொதப்பி விட்டது.

இந்தநிலையில் மீண்டும் பேட்மிண்டன் மூலமாகவே இந்தியாவுக்கு உயர்வு கிடைத்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் அபாரமாக ஆடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் 38 தங்கங்களுடன் இந்தியா 2வது இடத்தைப் பிடித்து விட்டது.

இன்று நடந்த இறுதிப் போட்டியில், மலேசிய வீராங்கனை மியூ சூ வோங்கை 19-21, 23-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சாய்னா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+