காமன்வெல்த் போட்டி: சிறந்த வீராங்கனை பட்டியலில் சாய்னா

அன்மையில் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. இதில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டிகளில் விளையாடிய வீராங்கனைகளில் சிறப்பாக விளையாடியவருக்கு லண்டனில் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. இதற்கான இறுதிப் பட்டியலில் 3 வீராங்கனைகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பெயரும் அடக்கம்.
இங்கிலாந்து தடகள வீராங்கனை ஜெசிகா எனிஸ், ஸ்காட்லாந்து துடுப்பு படகு வீராங்கனை காத்ரின் ஆகியோரின் பெயரும் அதில் உள்ளது. இவர்களில் யார் சிறந்த வீராங்கனைக்கான விருது பெறுவார் என்பது இன்று தெரியும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications