ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு: டெல்லி அரசு
டெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சாக்ஷி வெண்கலப் பதக்கமும் சிந்து வெள்ளி பதக்கமும் வென்று சரித்திரம் படைத்துள்ளனர். மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா முதல் முறையாக வெள்ளி வென்றுள்ளது.

பதக்கங்கள் வென்ற சாக்ஷிக்கும் சிந்துவுக்கும் பல்வேறு மாநில அரசுகள் பரிசுகளை அறிவித்துள்ளன. தற்போது டெல்லி மாநில அரசும் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
வெள்ளி வென்ற சிந்துவுக்கு ரூ2 கோடி, வெண்கலம் வென்ற சாக்ஷிக்கு ரூ1 கோடி பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Story first published: Saturday, August 20, 2016, 10:34 [IST]
Other articles published on Aug 20, 2016


Click it and Unblock the Notifications