Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்கில் சிந்து அணிந்திருந்த உடையால் திடீர் சர்ச்சை

பெங்களூரு: ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வெள்ளி வென்று சாதனை படைத்த பி வி சிந்து ஆடை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது இறுதிப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சிந்து. அந்த போட்டியின் போது அவர் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தார்.

Dress issue on P V Sindhu

இந்தயாவிற்கான அதிகார பூர்வமா ஸ்பான்சர் லி நிங் நிறுவனம், ரியோ ஒலிம்பிக் போட்டியில் போது இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை செய்திருந்தது.

அதன்படி, போட்டியின் போது இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் லி நிங் நிறுவனத்தின் ஆடையை அணிய வேண்டும். இந்த ஆடையை போட்டியின் போது சிந்து அணியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து லி நிங் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தர் மகேந்திர கபூர் இந்திய ஒலிம்பிக் கழகத்திடம் புகார் செய்துள்ளார்.

ஆனால், லி நிங் நிறுவனம் வழங்கிய ஆடையின் நிறம் சிந்து உட்பட பல வீரர் வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தவிர, சிந்துவிற்கு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களே ராசி என்பதால் அவர் ஒலிம்பிக் போட்டியின் போது மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தார். தொடக்கத்தில் லி நிங் நிறுவன ஆடைகளை அணிந்தே சிந்து விளையாடி வந்ததாகவும், அடுத்தடுத்த போட்டிகளில்தான் அவர் அந்த ஆடையை தவிர்த்தார் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Saturday, September 3, 2016, 15:00 [IST]
Other articles published on Sep 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+