முதல் ஆட்டத்தில் சிந்துவுக்கு வெற்றி… ஸ்ரீகாந்த் போராடி தோல்வி
துபாய்: சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் தொடரில், தனது முதல் ஆட்டத்தில் பி.வி. சிந்து வென்றார். அதே நேரத்தில் உலகின் நம்பர் 1 வீரரிடம், கிடாம்பி ஸ்ரீகாந்த் போராடி தோல்வியடைந்தார்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நேற்று துவங்கியது. இந்தப் போட்டியில், உலகின் தலைச் சிறந்த 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த ஆண்டுக்கான சூப்பர் சீரியஸ் பைனல்ஸ் போட்டிக்கு, இந்தியாவில் இருந்து ஸ்ரீகாந்த், சிந்து தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பி.வி. சிந்து தனது முதல் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள சீனாவின் ஹி பிங்ஜியாவோவுடன் மோதினார். இதில் 21-11, 16-21, 21-18 என்ற செட்களில் சிந்து வென்றார்.
ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் இந்தப் போட்டியின் அடுத்த ஆட்டத்தில் ஜப்பானின் சயாகோ சடோவை சிந்து சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையரில் பி பிரிவில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த், தனது முதல் ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்செல்சனுடன் மோதினார்.
உலகச் சாம்பியன் மற்றும் சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் நடப்பு சாம்பியனான அக்செல்சனுக்கு கடுமையான போட்டியை ஸ்ரீகாந்த் கொடுத்தார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் முன்னிலையில் இருந்தார். ஆனால் அக்செல்சனின் ஸ்மாஷ்களுக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் 21-13, 21-17 என்ற செட்களில் அக்செல்சன் வென்றார்.
ஸ்ரீகாந்த் அடுத்த ஆட்டத்தில் தைவானின் சோவ் சியான் சென்னை சந்திக்கிறார்.
Story first published: Thursday, December 14, 2017, 12:45 [IST]
Other articles published on Dec 14, 2017


Click it and Unblock the Notifications