Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய்னாவுக்கு இது கஷ்டமான பிரெஞ்சு ஓபன் தொடர்.. சிந்துவுக்கு கொஞ்சம் ஈஸி தான்

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் சில நாட்களில் தொடங்க உள்ளது.

தற்போது நடந்த டென்மார்க் ஓபன் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்து பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடருக்கான போட்டி அட்டவணையில் சாய்னா நேவால் வலுவான வீராங்கனைகளுடன் மோத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

French Open Badminton Saina Nehwal gets tough draw

முதல் சுற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் தரவரிசையில் 22வது இடத்தில் இருக்கும் வாங் விங் கி வின்சென்ட்-ஐ சந்திக்க உள்ளார். சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் 11வது இடத்தில் இருக்கும் பெய்வேன் சாங்-ஐ சந்திக்க உள்ளார்.

இந்த தொடரில் சிந்து இரண்டாம் சுற்றில் தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் பிங்ஜியோவை சந்திப்பார். அரையிறுதியில் அகானே யாமாகுச்சியை சந்திப்பார். சிந்து டென்மார்க் ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

அதே சமயம் சாய்னா நேவால் இரண்டாம் சுற்றில் நோசோமி ஒக்குஹாராவை சந்திப்பார். அதற்கடுத்த சுற்றில் டாய் ஸூவை சந்திக்க வாய்ப்புள்ளது. இது சாய்னாவுக்கு கடுமையான தொடராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, October 22, 2018, 19:05 [IST]
Other articles published on Oct 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+