For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளி மங்கை சிந்துவிற்கு குவியும் பணப் பரிசுகள்... பி.எம்.டபிள்யூ கார்

By Jaya

ரியோ:ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த சாதனை நாயகி சிந்துவிற்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சிந்துவிற்கு பரிசுகள் ரெடியாக இருக்கின்றன. விலை உயர்ந்த கார்கள், ப்ளாட்கள், பல கோடி ரொக்கப்பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

From BMW to Rs 2.05 crore and land, it's raining gifts for PV Sindhu

ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா, விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டினம் வரையுள்ள கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் ஜூவல்லரி ஷோரூம்கள் போன்றவை பரிசுகள் வழங்குவதற்கு சிந்துவின் வரவிற்காக காத்திருக்கின்றன.

பி.எம்.டபிள்யூ கார்

ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் சாமுண்டேஸ்வர்நாத் சிந்துவின் முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ கார் வழங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.

சாய்னா நேவால்

கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல், தற்போது சிந்துவிற்கும் பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் கொடுக்கும் பரிசு

செய்தியாளர்களிடம் பேசிய சாமுண்டேஸ்வர்நாத், சாய்னாவுக்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசாக என்னுடைய நண்பர் சச்சின் டெண்டுல்கர், தான் அன்பளிப்பு வழங்கினார். இதேபோல சிந்துவிற்கும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிந்துவிற்கு பரிசு

ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்து யாரெல்லாம் பதக்கம் வெல்கிறார்களோ அவர்களுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதுபோல சிந்துவிற்கு தரப்போகிறோம்.

From BMW to Rs 2.05 crore and land, it's raining gifts for PV Sindhu

கோபிசந்துக்கும் பரிசு

இதேபோல சிந்துவிற்கு 50 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் கோபிசந்துக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் இந்தி பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்திந்திய ஃபுட்பால் பெடரேசன் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுகளை சிந்துவிற்கும் சாக்ஷிக்கும் அறிவித்துள்ளது.

ரூ.1 கோடி பரிசு, நிலம்

இது தவிர, தெலுங்கானா அரசு ரூ.1 கோடியும், நிலமும் வழங்குவதாக அறிவித்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த ஜூவல்லரி ஷோரூம்கள், சிந்துவை தங்களின் நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக நியமிக்கயிருப்பதாக தெரிவித்துள்ளன.

சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிந்துவிற்கு வாழ்த்து கூறியதோடு ரூ. 50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளதாக அம்மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

From BMW to Rs 2.05 crore and land, it's raining gifts for PV Sindhu

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

ஹைதராபாத், தெலுங்கானாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பலவும் ப்ளாட்களை பரிசாக அறிவித்துள்ளன.

சிறப்பு பூஜைகள்

வெள்ளி வென்ற சிந்துவிற்கு ஹைதராபாத்தில் உள்ள பெட்டம்மா கோவில் மற்றும் ஜூபிலி ஹில்ஸ் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜையும் நடக்கயிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story first published: Saturday, August 20, 2016, 10:08 [IST]
Other articles published on Aug 20, 2016
English summary
The first gift that Sindhu will receive is a BMW from V Chamundeshwarnath, president of Hyderabad District Badminton Association.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X