Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மாதங்களாக சிரிக்க முடியவில்லை... என் தூக்கம் கலைந்தது... : பிவி சிந்து பயிற்சியாளர் கோபிசந்த்

ரியோ: சிந்துவின் தற்போதைய நிலை எனக்கு என்னுடைய விளையாட்டு நாட்களை நினைவுபடுத்துகிறது. என்னால் இரண்டு மாதங்களாக சிரிக்கக் கூட முடியவில்லை'' என்று கூறியுள்ளார் அவருடைய பயிற்சியாளரும் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான கோபிசந்த்.

பிவி சிந்துவின் நேற்றைய வெற்றிக்குப் பின்னர் என்னுடைய தூக்கம் கலைந்தது என்றும் கூறியுள்ளார்.

Gopichand reveals sleepless nights after Sindhu enters final

கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் சானியா நேவால் வெண்கலம் வெல்ல காரணமாக இருந்த இதே கோபிசந்த்தான் சிந்துவுக்கும் பயிற்ச்சியாளராக இருக்கிறார்.

இந்த முறை சிந்து இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவது உறுதியாகிவிட்டது. உலகின் நம்பர் ஒன் கரோலினாவை வெற்றி கொள்ளும் அனைத்து திறமைகளும், நம்பிக்கையும் சிந்துவுக்கு இருப்பதால், தங்கப் பதக்கத்தை வெல்லுவார் என்ற நம்பிக்கை கோபிசந்த்துவுக்கு உள்ளது.

நேற்று ஒவ்வொரு நிமிடமும் சிந்துவிற்கு பக்கபலமாக இருந்தார் கோபிசந்த். சிந்து வெற்றி பெற்ற உடன் சாதித்த பெருமை கோபிசந்த் முகத்தில் தெரிந்தது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக, முதன் முறையாக இந்தியப் பெண்ணாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நீடா அம்பானி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து, ''இன்று நான் இங்கு இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. விளையாட்டில் இந்தியாவுக்கு இருக்கும் வளத்தை சிந்துவும், சாக்ஷியும் நிரூபித்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு அதிக பலம் உள்ளது'' என்று பாராட்டினார்.

சிந்துவின் நேற்றைய வெற்றி நாட்டில் அதிகளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பதட்டத்தில் தூங்க முடியாமல் தவிக்கும் சிந்துவுக்கு கோபிசந்த் ஆறுதல் மட்டுமின்றி நம்பிக்கையும் அளித்து வருகிறார்.

Story first published: Friday, August 19, 2016, 18:23 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+