For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதைக் கிழிக்கத் தயாராகும் தாரை தப்பட்டைகள்.. சிந்துவை வரவேற்க தயாராகிறது ஹைதராபாத்!

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியா திரும்ப உள்ள "சில்வர் ராணி" பிவி சிந்துவை வரவேற்க ஹைதராபாத் நகரம் விழாக் கோலம் பூண்டு வருகிறது.

21 வயது நிரம்பிய சிந்து ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளியை பெற்று தந்து சாதனை படைத்தார். இன்றோடு ஒலிம்பிக் போட்டி முடிவடையும் நிலையில், சிந்து பிரேசில் நாட்டில் இருந்து நாளை ஹைதராபாத் திரும்ப உள்ளார். ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்க உள்ள அவருக்கு கோலாகல வரவேற்பளிக்க உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Grand welcome awaits PV sindhu in Hyderabad on August 22

விமான நிலையத்தில் நடைபெறும் வரவேற்பிற்கு பின்னர், அங்கிருந்து கச்சிபோலி விளையாட்டு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட உள்ளார் சிந்து. பின்னர், மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் சிந்துவிற்கு மரியாதை செய்யப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து விளையாட்டு மைதானம் செல்லும் வழி நெடுகிலும் பள்ளி மாணவர்கள் நின்று சிந்துவிற்கு உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழி எங்கும் வரவேற்பு பேணர்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

சிந்துவை வரவேற்கும் இந்த நிகழ்ச்சியை ஹைதராபாத் மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

Story first published: Sunday, August 21, 2016, 11:26 [IST]
Other articles published on Aug 21, 2016
English summary
A grand welcome will be accorded to Rio Olympics silver Medalist PV Sindhu when the badminton star arrives here.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+