Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிந்துவுக்கு ஹாட்ரிக் வெற்றி… ஆனால் ஸ்ரீகாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி

துபாய்: சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் தொடரில் பி.வி. சிந்து தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் வென்றார். அதே நேரத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் தோல்வியடைந்தார்.

பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது.

Hat-trick for Sindhu


மகளிர் ஒற்றையரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் பி.வி. சிந்து முதல் ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவையும் இரண்டாவது ஆட்டத்தில், ஜப்பானின் சயாகோ சடோவையும் வென்று அரை இறுதிக்கு ஏற்கனவே முன்னேறினார்.

நேற்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில், ஜப்பானின் அகினே யாமகூச்சியை 21-9, 21-13 என்ற நேர் செட்களில் வென்று, ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். அரை இறுதியில் சீனாவின் சென் யூபெயுடன் அவர் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையரில் பி பிரிவில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் ஆட்டத்தில் டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் தைவானின் சோவ் சியான் சென்னிடம் தோல்வியடைந்தார்.

ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்த அவர், நேற்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில், சீனாவின் ஷி யுகியிடம் 17-21, 22-20, 14-21 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.
Story first published: Saturday, December 16, 2017, 16:16 [IST]
Other articles published on Dec 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+