நம்பர் 1.. உலகத் தர வரிசையில்... புதிய வரலாறு படைத்த சாய்னா!
டெல்லி: பேட்மின்டன் தர வரிசையில், உலகின் நம்பர்-1 வீராங்கனையாக இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.
பாட்மின்டனில் சீனாவின் லீ ஷுயரை நம்பர்-1 இடத்தில் இருந்தார். இந்நிலையில், இந்திய ஓபன் பேட்மின்டனில் காயம் காரணமாக அவர் ஆடவில்லை. ஆனால், இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். அவர் தனது அரையிறுதி ஆட்டத்தில், யுய் ஹசிமோட்டோவை எதிர்கொள்கிறார்.

இதன்காரணமாக, சாய்னா உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அரையிறுதியில் சாய்னா தோற்றாலும்கூட, அவரது இடத்திற்கு ஆபத்து கிடையாது.
இந்திய பாட்மின்டன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு வீராங்கனை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Story first published: Saturday, March 28, 2015, 17:33 [IST]
Other articles published on Mar 28, 2015


Click it and Unblock the Notifications