Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் 'வெள்ளி மங்கை' பி.வி.சிந்து

ஹாங்காங்: 'ஹாங்காங் ஓபன்' சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரும், சமீபத்தில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான பி.வி.சிந்து.

ஹாங்காங் ஓபன் டென்னிஸ், கோவ்லூன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்த நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இன்றைய 'கடைசி 16' சுற்றில்ஸ தாய்வான் வீராங்கனை சுயா சிங்-கை எதிர்கொண்டார்.

Hong Kong Open: Saina Nehwal, PV Sindhu enter quarter-finals

இதில் ஆக்ரோஷம் காட்டிய சிந்து, 21-10, 21-14 என்ற நேர், செட்களில், எதிராளியை வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து ஹாங்காங் ஓபனிலும் ஜொலிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்லது.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், இந்த சுற்றில் இன்று, உலக பேட்மிண்டன் தர வரிசையில் 11வது இடத்திலுள்ள சயாகா சாடோவை எதிர்கொண்டார் சாய்னா நேவால். முதல் சுற்றை 18-21 என்ற கணக்கில் இழந்த சாய்னா, அடுத்த செட்டை 21-9 என்ற கணக்கில் அபாரமாக வென்று அசத்தினார். இதன்பிறகு மூன்றாவது செட்டையும் பெரிய கஷ்டமின்றி 21-16 என்ற கணக்கில் தன்வசப்படுத்திய சாய்னா நேவால் ஹாங்காங் ஓபன் டென்னிசின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Thursday, November 24, 2016, 17:07 [IST]
Other articles published on Nov 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+