“என்றாவது ஒரு நாள் ரஜினியை நேரில் சந்திப்பேன்”... ஆவலாகக் காத்திருக்கும் பி.வி.சிந்து!
ஹைதராபாத்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றபோது, ரஜினிகாந்தின் அந்த ட்வீட் அந்த நாளை முழுமையாக்கியது. நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன்' என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியர்களின் மனதில் இடம் பிடித்தவர் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து. வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு பிரதமர் மோடி உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினியும் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், தான் சிந்துவின் தீவிர ரசிகர் என ரஜினி குறிப்பிட்டிருந்தார். இந்த டிவிட்டிற்கு சிந்துவும் தனது பதில் நன்றியைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், 'என்றாவது ஒருநாள் ரஜினியை சந்திக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்' சிந்து.
மேலும் இது தொடர்பாக அப்பேட்டியில் அவர், "ரஜினிகாந்தின் அந்த ட்வீட் அந்த நாளை முழுமையாக்கியது. நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, 'எனக்கு டிவி பார்ப்பது மிகவும் பிடிக்கும். அது தவிர பயணங்கள் செய்வது, பாடல்கள் கேட்பது பிடிக்கும். அவரவர் தேர்தெடுக்கும் விளையாட்டு துறையில் நம்பிக்கையுடன் விளையாண்டால் வெற்றி நிச்சயம் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்' என்றும் அப்பேட்டியில் சிந்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications