Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. பாட்மின்டனில் பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்!

டெல்லி: காமன்வெல்த் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை அள்ளி வருவதற்கு இந்திய பாட்மின்டன் வீரர்கள் தயாராக உள்ளனர்.

இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாட்மின்டன் பிரிவில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது. சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து வெள்ளி வென்றார்.

இந்த நிலையில் அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் வரும் 18ம் தேதி துவங்க உள்ளது. இதில் சாய்னா நெஹ்வால், பிவி சிந்து, ஸ்ரீகாந்த், பிரனாய் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல வீரர்களும், வீராங்கனைகளும் களமிறங்க உள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை தனிநபர் பிரிவில் ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. 1982ல் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையரில் சையத் மோடி வெண்கலம் வென்றார்.

கிடைத்த பதக்கங்கள்

கிடைத்த பதக்கங்கள்

ஆடவர் இரட்டையரில் 1982ல் லேராய் டிசா மற்றும் பிரதீப் காந்தே வெண்கலம், அணிகள் பிரிவில் ஆடவர் அணி 1974, 1982, 1986ல் வெண்கலம் வென்றது. மகளிர் அணி 1982ல் வெண்கலம், 2014ல் வெண்கலம் வென்றது. கலப்பு இரட்டையரில் 1982ல் லேராய் டிசா, கன்வல் தாகுர் சிங் வெண்கலம் வென்றது.

ஒரு போட்டியில் 5 பதக்கம்

ஒரு போட்டியில் 5 பதக்கம்

1982ல் மட்டுமே இந்தியாவுக்கு அதிகபட்சமாக 5 வெண்கலம் கிடைத்தது. மகளிர் ஒற்றையரில் இதுவரை பதக்கம் வென்றதில்லை. தற்போது பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் பங்கேற்பதால், மகளிர் ஒற்றையரில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது.

வலுவான இந்திய அணி

வலுவான இந்திய அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், பிரனாய், பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர சாய் பிரனாத், சமீர் வர்மா, சவுரப் வரமா, காயத்ரி கோபிசந்த், அஷ்மிதா சாலிகா உள்ளிட்டோர் அணிகள் பிரிவில் விளையாட உள்ளனர். இரட்டையர் பிரிவுகளில் மிகவும் வலுவான அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, சாத்விக் ராங்கிரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பதக்கங்களை அள்ளி வருமா

பதக்கங்களை அள்ளி வருமா

அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை முழு நம்பிக்கையுடன் உள்ளனர். அதனால், பதக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், இதுவரை தங்கம் மற்றும் வெள்ளி வென்றதில்லை என்ற குறையை தீர்த்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, August 7, 2018, 12:00 [IST]
Other articles published on Aug 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+