இந்திய ஓபன் பேட்மிண்டன்.. சாய்னாவை வீழ்த்தினார் சிந்து !
டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் சாய்னா நேவாலை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் மோதினர்.

2017ஆம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர்.
மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய பிவி சிந்து 21-16 மற்றும் 22-20 என்ற நேர் செட்களில் சாய்னாவை வீழத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சுங் ஜி ஹியூனை எதிர்கொள்கிறார் பிவி சிந்து.
Story first published: Friday, March 31, 2017, 20:05 [IST]
Other articles published on Mar 31, 2017


Click it and Unblock the Notifications