Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 வயதிலேயே பேட்மின்டன் வீராங்கனையாக உருவான சிந்து.. பலரும் அறியாத தகவல்கள் இதோ!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார் பி.வி.சிந்து. கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால், இந்த ஒலிம்பிக் லீக் ஆட்டத்தில் வெளியேறிய நிலையில், பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவராலும் பாராட்டப்படுகிறார் சிந்து.

சாய்னாவின் பெயரை தூக்கி சாப்பிட்டுவிட்ட சிந்துவை பேட்மின்டனை தொடர்ந்து கவனிக்கும் ரசிகர்கள் அறிந்தே வைத்திருந்தனர். ஒலிம்பிக்கின்போது அவரை பற்றிய அறிமுகம் கிடைத்தவர்களுக்கு சிந்து பற்றிய விவரங்கள் தெரிந்திருப்பது அவசியம்.

சிந்து பற்றிய சிறு குறிப்பு இதோ: முழு பெயர்: புசர்லா வெங்கட சிந்து. பிறந்தது: 1995, ஜூலை 5ம் தேதி. பிறந்த நகரம்: ஹைதராபாத். உயரம்: 5 அடி 9 இன்ச்.

8 வயதில் அறிமுகம்

8 வயதில் அறிமுகம்

பேட்மின்டன் அறிமுகம்: சிந்து 8வது வயதில் இருந்தே பேட்மின்டன் ஆட தொடங்கினார். 13 வயதில் தொழில்முறை ஆட்டக்காரராக மாறினார்.

புலிக்கு பிறந்தது

புலிக்கு பிறந்தது

குடும்ப பின்னணி: தந்தை ரமணா, தாய் விஜயா ஆகியோர் முன்னாள் கைப்பந்தாட்டக்காரர்கள். பயிற்சியாளர்கள்: சிந்துவின் முதல் பயிற்சியாளர் மெகபூப் அலி. தற்போது கோபிச்சந்த் பயிற்சியளிக்கிறார்.

தர வரிசையில் 10வது

தர வரிசையில் 10வது

தர வரிசை: சிந்து தற்போது உலக தர வரிசையில் 10வது இடத்தில் உள்ளார். மொழி அறிவு: தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம்

சாதனைகள்

சாதனைகள்

முக்கிய சாதனைகள்: 2011ல் இந்தோனேஷிய இன்டர்நேஷனல் கோப்பை, 2013 மற்றும் 2016ல் மலேசியா மாஸ்டர்ஸ் , 2013, 2014, 2015 ஆகிய ஆண்்டுகளில் மகாவு ஓபன் ஆகிய தொடர்களை சிந்து வென்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்

உலக சாம்பியன்ஷிப்

2013 மற்றும் 2014ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

தங்கம்

தங்கம்

2014 மற்றும் 2016களில் இருமுறை ஊபர் கோப்பை அணிக்காக வெண்கலம் வென்றார். 2014 காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். 2011 மற்றும் 2012ல் முறையே கிம்செயான் மற்றும் துக்லஸ் போட்டிகளில் தங்கம் வென்றார்.

அர்ஜுனா, பத்ம ஸ்ரீ

அர்ஜுனா, பத்ம ஸ்ரீ

விருதுகள்: 2013ல் அர்ஜுனா விருதையும், 2015ல் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்ற கவுரவத்திற்கு சொந்தக்காரர் சிந்து.

Story first published: Friday, August 19, 2016, 21:34 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+