Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்.. சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் சாய் பிரனீத்!

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தன்னை எதிர்த்து விளையாடிய இந்தோனேசிய வீரரை வீழ்த்தி சாய் பிரனீத் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டிகள் பாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.

India's Sai Praneeth wins Thailand Open badminton tournament

இதில் இந்தியாவின் சாய்பிரனீத் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்க்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை நழுவ விட்ட சாய் பின்னர் சுதாரித்து ஆடினார்.

அடுத்த 2 செட்டுகளையும் கைப்பற்றிய அவர் போட்டியை தனதாக்கினர். ஆட்டத்தின் முடிவில் 17-21, 21-18, 21-19 என்ற செட்களில் இந்தோனேசியாவின் ஜோனதனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

Story first published: Sunday, June 4, 2017, 17:20 [IST]
Other articles published on Jun 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+