Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊபர் கோப்பை பாட்மின்டன்.... ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா!

ஹாங்காங்: ஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டியில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் ஒன்றான தாமஸ் அண்ட் ஊபர் கோப்பை போட்டிகள் ஹாங்காங்கில் நடக்கிறது. இதில் மகளிர் அணிகளுக்கு இடையேயான ஊபர் போட்டிகள் துவங்கியுள்ளன.

India wins australia in the uber cup badminton

இதில் ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் கனடாவிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் இன்று நடந்தது. இதில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதன் மூலம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக வலுவான ஜப்பான் அணியுடன் மோத உள்ளது.

இன்று நடந்த ஆட்டத்தில் சாய்னா நெஹ்வால் 21-14. 21-19 என்ற செட்களில் வென்றார். அதற்கடுத்து நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் மேகனா ஜக்கம்புடி, பூர்விஷா ராம் ஜோடி 13-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

பின்னர் நடந்த ஒற்றையரில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 21-17, 21-13 என்ற கணக்கில் வெல்ல, இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது.

மற்றொரு இரட்டையரில் சன்யோகிதா கோர்படே, பிரஜக்தா சாவந்த் ஜோடி 21-19, 21-11 என்ற கணக்கில் வென்றது. மற்றொரு ஒற்றையரில் அனுரா பிரபுதேசாய் 21-6, 21-7 என்ற செட்களில் சுபலமாக வெல்ல, இந்தியா 4-1 என்ற கணக்கி்ல வென்றது.

Story first published: Monday, May 21, 2018, 21:30 [IST]
Other articles published on May 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+