இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.
2017ஆம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் அரை இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, தென் கொரிய வீராங்கனை கங் ஜியுடன் பலப்பரீட்சை நடத்தினார். அபாரமாக ஆடிய சிந்து, 21-18, 14-21,21-14 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து
Story first published: Saturday, April 1, 2017, 19:33 [IST]
Other articles published on Apr 1, 2017


Click it and Unblock the Notifications