உலக சாம்பியன் பாட்மிண்டன் போட்டி.. பி.வி.சிந்து பட்டம் வென்று உலக சாதனை
குவாங்சு : உலக பேட்மிண்டன் சீரிஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வென்று மகுடம் சூடினார்.
சீனாவில் உலக பேட்மிண்டன் சீரிஸ் போட்டி நடைபெற்றது. தொடரின் இறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனையும் உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் பி.வி. சிந்து, 7வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இறுதிப்போட்டியில் அவர், அதிரடியாக விளையாடினார். முதல் செட்டை பிவி சிந்து 21க்கு 19 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து, 2வது செட்டிலும் பி.வி. சிந்து அதிரடியை கைவிட வில்லை. 21க்கு 17 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து, இறுதிப்போட்டியில் பெற்று வந்த தோல்விகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து தற்போது மகுடம் சூடியுள்ளார். அவரது இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications